சிம்பாப்வே தொடருக்கான 18 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ள அவிஷ்க பெர்னாண்டோ, நேற்று கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
அவிஷ்க பெர்னாண்டோவுக்கு மேற்கொள்ளப்பட்ட விரைவான ஆன்டிஜென் பரிசோதனையிலேயே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது. இதனால் அவர் சிம்பாப்வேயுடனான தொடரினை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அவிஷ்க பெர்னாண்டோ இல்லாதது இலங்கையின் துடுப்பாட்ட வரிசைக்கு ஒரு கணிசமான அடியாகும், ஆனால் முன்னர் தடை செய்யப்பட்ட மூவரான குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா மற்றும் தனுஷ்க குணதிலகா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது சாதகமாக அமைந்துள்ளது.
ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணி உத்தியோகபூர்வமாக அம் மூன்று வீரர்களும் பெயரிடப்படவில்லை, ஆனால் அந்த மூன்று துடுப்பாட்ட வீரர்களிலும் குறைந்தது இரண்டு பேராவது அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவிஷ்க பெர்னாண்டோ லங்கா பிரீமியர் லீக்கின் கடைசி இரண்டு போட்டிகளில் 64 பந்தில் 100 ஓட்டங்களையும், 41 பந்தில் 63 ஓட்டங்களையும் விளாசி சிறந்த நிலையில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் ஜனவரி 16 ஆம் திகதி தொடங்க உள்ளது. மூன்று போட்டிகளும் கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெறும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆட்டங்கள் ஜனவரி 18 மற்றும் ஜனவரி 21 ஆம் திகதிகளில் நடைபெறும்.
No comments:
Post a Comment