படகு மீது பாறை இடிந்து வீழ்ந்ததில் ஏழு பேர் பலி, 32 பேர் காயம் ! வீடியோ - News View

About Us

About Us

Breaking

Sunday, January 9, 2022

படகு மீது பாறை இடிந்து வீழ்ந்ததில் ஏழு பேர் பலி, 32 பேர் காயம் ! வீடியோ

தென்கிழக்கு பிரேசிலில் அமைந்துள்ள ஏரியில் பயணித்த மோட்டார் படகு மீது பாறையொன்று எதிர்பாராத விதமாக இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் குறித்த படகில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தின் கேபிடோலியோவில் அமைந்துள்ள ஏரியொன்றிலேயே சனிக்கிழமை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

பாறை இடிந்து ஏரியில் வீழ்ந்ததையடுத்து பல படகுகள் நொறுக்கின மற்றும் பாரிய அலைகளும் ஏழுந்தன. இதனால் படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் பீதியில் கூச்சலிட்டனர்.

அனர்த்தம் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், மூவர் காணாமல் போயுள்ளனர், 32 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒன்பது பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பிரேசிலின் தீயணைப்பு பிரிவினர் உறுதிபடுத்தியுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் உட்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இரவில் தேடல் தடைப்பட்டு காலையில் மீண்டும் தொடங்கியது.

தென்கிழக்கு பிரேசிலில் கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான மழை பெய்து வருகிறது, இதனால் பாறை சரிவுகள் அதிகமாக உள்ளதாக தீயணைப்புத்துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment