அதிவேக வீதிகள் ஊடாக கடந்த ஆண்டில் 8.8 பில்லியன் ரூபா வருமானம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 15, 2022

அதிவேக வீதிகள் ஊடாக கடந்த ஆண்டில் 8.8 பில்லியன் ரூபா வருமானம்

அதிவேக வீதிகள் ஊடாக கடந்த 2021 ஆம் ஆண்டில் மாத்திரம் 8.8 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

குறித்த ஆண்டில் அதிவேக வீதிகள் ஊடாக பயணித்துள்ள 38.6 மில்லியன் வாகனங்கள் ஊடாக இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிவேக வீதிகள் ஊடாக ஒரு வருடத்தில் ஈட்டப்பட்ட அதிக பட்ச வருமானமாக இது கருதப்படுகிறது.

2021 ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட வருமானத்தில் தெற்கு அதிவேக வீதி ஊடாக 4.5 பில்லியன் ரூபாக்களும், கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் கொழும்பு சுற்று வட்ட அதிவேக வீதி ஊடாக 4.3 பில்லியன் ரூபாக்களும் வருமானமாக கிடைத்துள்ளன.

இந்த வருமானமானது கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 21 வீத அதிகரிப்பு என வீதி அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

No comments:

Post a Comment