இரசாயன உரத்தை வழங்க முடியாதெனில் அதற்கான சுற்றறிக்கை ஏன் வெளியிடப்பட்டது? - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Monday, December 20, 2021

இரசாயன உரத்தை வழங்க முடியாதெனில் அதற்கான சுற்றறிக்கை ஏன் வெளியிடப்பட்டது? - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி

(எம்.மனோசித்ரா)

இரசாயன உரத்தை வழங்க முடியாதெனில் அதற்கான சுற்றறிக்கை ஏன் வெளியிடப்பட்டது என்பதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

திஸ்ஸமஹாராம, காசிங்கம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இரசாயன உரங்களை வழங்க முடியாது என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தற்போது தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாக சுற்றறிக்கையை வெளியிட்டது ஏன் என அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான சுற்றறிக்கைகளை வெளியிட்டு விவசாயிகளை அரசாங்கம் மீண்டும் ஏமாற்றியுள்ளது. விவசாயிகளுக்கு வெடிக்கும் திரவ உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயத்திற்கும் விவசாய மக்களுக்கும் ஏன் இவ்வாறான அழிவை ஏற்படுத்துகின்றீர்கள்?

தரமற்ற உரக் கப்பலுக்கு நட்டஈடு வழங்குவதற்கு உள்ள தேவைப்பாடு அநியாயத்திற்குள் தள்ளியிருக்கின்ற அப்பாவி விவசாயிகளுக்கு நட்ட ஈட்டை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிப்பதில்லை.

பண்டிகைக் காலம் அண்மித்திருக்கின்ற நிலையில் மக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளும் அமைச்சர்களுக்கும் நண்பர்களுக்கும் மாத்திரமே கிடைக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment