உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயம்

(கே.மொரின்)

உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் கட்டாயமாக காட்சிப்படுத்துவதற்கு புதிய பாதுகாப்பு ஸ்டிக்கரை அறிமுகப்படுத்தவுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளுர் சந்தையில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்கள் நாட்டிற்கு கடத்தப்படுவதை தடுப்பதற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபான விற்பனை மூலம் திறைசேரிக்கு செலுத்த வேண்டிய சகல வரிகளையும் அறவிடுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஸ்டிக்கர் இல்லாமல் சந்தையில் விற்பனை செய்யப்படும் மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களை அகற்றுவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஏப்ரல் 01 ஆம் திகதிக்குள் நாடளாவிய ரீதியில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் இந்த பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கட்டாய பாதுகாப்பு ஸ்டிக்கர் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களிலும் அமுல்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment