(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சபையில் ஆவேமான முறையில் நடந்துகொள்ளுதல் மற்றும் ஏனைய உறுப்பினர்களை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் கருத்துக்களை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) சபாநாயகர் அறிவிப்பு நேரத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னை சந்தித்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன்படி அனைத்து எம்பிக்களினதும் பாதுகாப்பை உறுப்படுத்தும் முழுமையான பொறுப்பை சபாநாயகர் என்ற ரீதியில் நான் கொண்டுள்ளேன். இதன்படி அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளேன்.
எவ்வாறாயினும் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொள்ளுமாறு அனைத்து எம்பிக்களையும் கேட்டுக் கொள்கின்றேன்.
குறிப்பாக சபையில் உரையாற்றும் போது ஆவேசமாக கருத்து வெளியிடுதல் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட ரீதியில் அபகீர்த்திகளை ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் இருந்து தவிர்த்துக் கொள்ளுமாறும் மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கின்றேன் என்றார்
No comments:
Post a Comment