(இராஜதுரை ஹஷான்)
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் நிர்வாக சேவை அதிகாரியான நீல் டி அல்விஸ் நெல் விநியோக சபை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதேச செயலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் அரச பரிபாலன சேவை அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய நீல் டி அல்விஸ் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்தவின் ஆலோசகராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான எம்.டி.ரஞ்சனி ஜயகொடி விவசாயத்துறை அமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் பிரதேச செயலாளர், நிறைவேற்று பணிப்பாளராக சேவையாற்றியுள்ளதுடன், இலங்கை நிர்வாக சேவையில் 32 வருடகாலமாக சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றி ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment