ஆங் சான் சூக்கிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

ஆங் சான் சூக்கிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

மியன்மாரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூக்கிக்கு எதிரான வழக்கில் அளிக்கப்பட வேண்டிய தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சூக்கி மொத்தம் 11 வழக்குகளை எதிர்நோக்குகிறார். அவை அனைத்திலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் 100 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும்.

அந்தக் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் அவரை இழிவுபடுத்தவும், சிறையில் அடைக்கவும் வரையப்பட்ட திட்டங்கள் என்று ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

வழக்கு விசாரணையில் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று மியன்மார் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment