மீன் பிடித்த சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பலி : பருத்தித்துறையில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

மீன் பிடித்த சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பலி : பருத்தித்துறையில் சம்பவம்

தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பருத்தித்துறை திக்கம் நாச்சிமார் கோவிலடியில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த நியந்தன் ரித்திக்குமார் (வயது-8) என்ற சிறுவனே உயிரிழந்தார்.

பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ளனர். சிறுவன் தோட்டக் காணியில் பட்டம் ஏற்றி விளையாடி விட்டு சகோதரியுடன் இணைந்து தோட்டக் காணியில் உள்ள கிணற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது, கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளான்.

சம்பவத்தை ஓடிச் சென்று உறவினர்களிடம் சகோதரி தெரிவித்துள்ளார். உறவினர்கள் சென்று கிணற்றில் தேடிய போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனான் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை ஆதார மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராசா, சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க அறிக்கையிட்டார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment