(இராஜதுரை ஹஷான்)
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும், சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்களுக்கும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பொறுப்புக்கூற வேண்டும். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அறிமுகப்படுத்தும் நிவாரணப் பொதித் திட்டம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில் இருந்து வர்த்தகத்துறை அமைச்சு விலகியுள்ளது. வர்த்தகர்களே பொருட்களின் விலையை தீர்மானித்துக் கொள்கிறார்கள். ஒரு பொருளின் விலை பிரதேச அடிப்படையில் வேறுப்பட்டதாக காணப்படுகிறது. நுகர்வோர் அதிகார சபை உள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். முறையற்ற செயற்பாட்டின் காரணமாக சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்புச் சம்பவம் நாட்டு மக்களுக்கு பிறிதொரு பிரச்சினையாக காணப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கும்,சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவத்திற்கும். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment