கூப்பன் முறையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கவும் : அமைச்சர் வாசுதேவ அரசிடம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, December 20, 2021

கூப்பன் முறையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கவும் : அமைச்சர் வாசுதேவ அரசிடம் வேண்டுகோள்

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை கூப்பன் முறைமையில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சாதாரண மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார். 

இதற்கு தீர்வாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கூப்பன் அடிப்படையில் அத்தியாவசிய உணவுகளை விற்பனை செய்யும் திட்டத்தை முன்மொழிவதாகவும் அவா் தெரிவித்தார்.

இந்த யோசனையை நான் ஏற்கனவே அமைச்சரவை மட்டத்தில் கொண்டு வந்துள்ளேன் என வாசுதேவ கூறினார்.

அரசாங்கம் மிக நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. அதனால் மக்களுக்கும் ஓரளவு சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

மக்களின் அந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு நம்பிக்கையை கட்டியெழுப்ப நாம் தயாராகவுள்ளோம். அதற்கிணங்க குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கூப்பன் முறையில் பெற்றுக் கொடுக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதேவேளை, எருபொருள் தெரிவான சிக்கல்களை நிவர்த்திக்கும் வகையில் அதனையும் கூப்பன் முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அதன் மூலம் எருபொருள் பாவனை குறைத்துக் கொள்ளவும் வழிவகை அவசியமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment