மேலும் 820,000 Pfizer தடுப்பூசி டோஸ்களை அன்பளிப்புச் செய்த அமெரிக்கா : இலங்கைக்கு 17.9 மில்லியன் டொலர் பெறுமதியான சுகாதார உதவிகள் - News View

About Us

About Us

Breaking

Monday, December 20, 2021

மேலும் 820,000 Pfizer தடுப்பூசி டோஸ்களை அன்பளிப்புச் செய்த அமெரிக்கா : இலங்கைக்கு 17.9 மில்லியன் டொலர் பெறுமதியான சுகாதார உதவிகள்

அமெரிக்கா மேலும் 820,000 Pfizer-BioNTech தடுப்பூசி டோஸ்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அதற்கமைய, இதுவரை அமெரிக்காவினால் COVAX வசதி ஊடாக, இலங்கைக்கு 3.4 மில்லியன் Pfizer கொவிட் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

முடிந்தவரை அதிகமானோருக்கு தடுப்பூசி போடுவதற்கான இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவியளிக்கும் என அமெரிக்க தூதுவர் மார்ட்டின் கெல்லி தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், புதிய பிறழ்வுகள் தோன்றுவதைத் தடுப்பதற்கும், வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் பரவலான தடுப்பூசி வழங்கல் இன்றியமையாதது என்பதுடன், இலங்கையின் சுகாதார அமைச்சு, UNICEF மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து, கொவிட் தொற்று நோய் அச்சுறுத்தலுக்கு எதிராக மிகப் பாதுகாப்பான உலகைக் கட்டியெழுப்ப எம்மால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் என அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இலங்கைக்கு மிக அவசர விநியோகங்கள், வென்டிலேட்டர்கள், உபகரணங்கள் உள்ளிட்ட 17.9 மில்லியன் டொலர் பெறுமதியான சுகாதார உபகரணங்கள் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக, மார்ட்டின் கெல்லி தெரிவித்துள்ளார்.

இன்று (20) காலை குறித்த தடுப்பூசி தொகை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இன்றுவரை, இலங்கை உட்பட 100 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 300 மில்லியனுக்கும் அதிகமான COVID-19 தடுப்பூசிகளை அமெரிக்கா நன்கொடையாக விநியோகித்துள்ளதாக, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment