297.6 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இலங்கையர் சென்னையில் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 8, 2021

297.6 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இலங்கையர் சென்னையில் கைது

297.6 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 பேர் கடத்தி வந்த 690 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (06) கொழும்பில் இருந்து விமானம் மூலம் இந்தியாவின் சென்னையை வந்தடைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment