தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில், குற்றப் புலனாய்வுப் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, Epic Lanka Technologies நிறுவனத்தின் உதவி மென்பொருள் பொறியியலாளருக்கு எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்றையதினம் (02) கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கியுள்ளார்.
34 வயதான குறித்த சந்தேகநபர், கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி திவுலபிட்டி, வல்பிட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment