அபீன் போதைப் பொருளை கடத்திய குடும்பஸ்தர் காத்தான்குடியில் கைது - News View

Breaking

Monday, November 15, 2021

அபீன் போதைப் பொருளை கடத்திய குடும்பஸ்தர் காத்தான்குடியில் கைது

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

அபீன் என்றழைக்கப்படும் போதைப் பொருளை கடத்திய குடும்பஸ்தரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றிற்கமைய ஞாயிற்றுக்கிழமை (15) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பொலனறுவை மாவட்டம் கதுருவெல பகுதியில் இருந்து அரச பேரூந்தில் அபின் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றிற்கமையவே காத்தான்குடி டெலிகொம் சந்தியில் வைத்து இச்சந்தேக நபர் கைதானார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கதுருவெல பகுதியை சேர்ந்தவர் எனவும் 50 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபரிடம் இருந்து 100 கிராம் அடங்கிய அபின் போதைப் பொருள் மீட்கப்பட்டன.

மேலும் கைதான சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment