எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனையிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன படகு சென்னை காசிமேடு பகுதியில் கரையொதுங்கியுள்ள நிலையில், காணாமற்போன கடற்றொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்டஸ் தேவானந்தாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனையிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காணாமற்போன நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் சென்னை காசிமேடு பகுதியைச்சேர்ந்த படகின் மூலம் திருவள்ளுர் மாவட்டம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதானி துறைமுகத்தில் உள்ளே நுழைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சின் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த படகு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது முதல் நாளிலேயே படகு என்ஜின் பழுது ஏற்பட்டு விட்டது என்றும் மேலும் காற்றுவாக்கில் அந்தமான் பகுதிக்கு சென்றதாகவும் நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னை காசிமேடு பகுதியைச்சேர்ந்த IND TN 02 MM2543 என்ற படகின் மூலம் இரவு 11.30 மணிக்கு திருவள்ளுர் மாவட்டம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதானி துறைமுகத்தில் உள்ளே நுழைந்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு தொலைபேசியில் தெரிவித்தாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
காணாமற்போன கடற்றொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்டஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட கடற்றொழில் அதிகாரிகள், இந்திய கடலோர காவற்படை அதிகாரிகள் இதனோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment