மேலதிக வகுப்புகள் தொடர்பான விளம்பரங்களுக்கு சீனாவில் தடை - News View

About Us

About Us

Breaking

Thursday, November 11, 2021

மேலதிக வகுப்புகள் தொடர்பான விளம்பரங்களுக்கு சீனாவில் தடை

தனியார் வகுப்புகளை முடக்கும் நடவடிக்கையை சீனா இரட்டிப்பாக்கியுள்ளதோடு பாலர், ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலை பிள்ளைகளை இலக்கு வைக்கும் ஒன்லைன் மற்றும் ஓப்லைன் கல்வி நிகழ்ச்சி விளம்பரங்களுக்கு முழுமையாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜுலையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தடையை கண்டிப்பாக செயற்படுத்துவதற்கு எட்டு ஒழுங்குபடுத்துநர்களைக் கொண்ட குழு உத்தரவிட்டுள்ளது. 

“செய்திப் பத்திரிகைகள், சமூக ஊடகம், பொது இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வைக்கப்படும் விளம்பரங்களை” தடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தரம் ஒன்று தொடக்கம் ஒன்பது வரை பாடசாலை பாடத்திட்ட வகுப்புகளுக்காக மேலதிக வகுப்புகளை வழங்குவதன் மூலம் இலாபம் ஈட்டுவதை தடுக்கும் நடவடிக்கை கடந்த ஜுலையில் சீன அரசினால் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் குறித்த விளம்பரத் தடையில் சீனாவின் கல்வி அமைச்சு மற்றும் இணையவெளி நிர்வாகமும் இணைந்துள்ளது.

ஏற்கனவே இவ்வாறான 1,570 சட்டவிரோத விளம்பரங்கள் அடையாளம் காணப்பட்டு 30.6 மில்லியன் யுவான் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment