காபூல் இராணுவ வைத்தியசாலைக்கு அருகே இரட்டை குண்டு வெடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

காபூல் இராணுவ வைத்தியசாலைக்கு அருகே இரட்டை குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக ஆதராங்களை மேற்கொள்ளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபூலின் கசர்தார் மொஹமட் தாவுத் கான் வைத்தியசாலைக்கு அருகிலேயே செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 13:00 மணியளவில் (8:30 GMT) இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த குண்டு வெடிப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இது ஒரு கார் வெடி குண்டு சம்பவம் என்று சாட்சிகள் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் தலிபான் அதிகாரிகளிடம் இருந்து எந்த கருத்தும் உடனடியாக கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment