களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக மஹிந்த சங்கரக்கித தேரர் நியமனம் - News View

Breaking

Friday, November 5, 2021

களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக மஹிந்த சங்கரக்கித தேரர் நியமனம்

களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக களனி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரக்கித தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக கடமையாற்றிய கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம தேரர், அண்மையில் காலமானார்.

இதனையடுத்து வெற்றிடமாகி இருந்த களனி பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

நவம்பர் 17ஆம் திகதி முதல் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment