ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தின்போது சுகயீனமுற்று உயிரிழந்த ஆசிரியைக்கு மட்டக்களப்பில் அஞ்சலி - News View

About Us

About Us

Breaking

Saturday, November 13, 2021

ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தின்போது சுகயீனமுற்று உயிரிழந்த ஆசிரியைக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கொழும்பில் இடம்பெற்ற ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தின்போது கடந்த 9ம் திகதி சுகயீனமுற்று உயிரிழந்த தெனியாய மத்திய கல்லூரியின் ஆசிரியைக்கு மட்டக்களப்பில் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில், இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராஜா ருபேஷன் தலைமையில் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்கா முன்பாக, மரணமடைந்த ஆசிரியை ஏ.டி. வருணிகா அசங்கா வின் உருவப்படத்திற்கு மலர்வைத்து, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தனது உடல் சுகயினத்தையும் பொருட்படுத்தாது அனைத்து ஆசிரியர் அதிபர்களுக்காகவும் போராடிய வேளையில் சுகயீனம் காரணமாக மரணித்த ஏ.டி. வருணிகா அசங்கா வின் ஆத்மா சாந்தி வேண்டி இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அன்னாரின் குடும்பத்தாற்கு ஆழ்ந்த கவலையையும் சங்கத்தின் சார்பாக இதன்போது தெரிவித்தனர்.
இவ் அஞ்சலி அனுஷ்டிப்பைத் தொடர்ந்து இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராஜா ருபேஷன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

வரவு செலவு திட்டத்தில் எதிர்வரும் வருடம் ஜனவரியில் இருந்து முன்றில் ஒரு பகுதி சம்பள முரண்பாடுக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த வேளையிலும் அரசாங்கம் எம்மை இதிலும் ஏமாற்றினால் எமது போராட்டம் மிகவும் சக்தி படைத்ததாக அமையும் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுகின்றேன். இவ்விடயத்தினை நாங்ங்கள் அவதானத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்போம்.

இதேவேளை நிதியமைச்சர் 2022 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கல்விக்கு எப்போதுமில்லாமல் அதிக பணம் ஒதுக்கியமை பாரட்டத்தக விடயம்.

இந்த அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் கல்விக்கு கூடிய பணம் ஒதுக்கியதுே போல் நகர்ப்புற பாடசாலையில் இருக்கும் வளப் பகிர்வானது கிராமப்புற பாடசாலைகளுக்கும் சரியான முறையில் செல்ல வேண்டும். அதேவேளை கிராமப்புற பாடசாலை மாணவர்கள் ஸ்மாட் தொழிநுட்ப கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment