வேற்றுக்கிரகவாசியாக மாற விரும்பும் விசித்திர மனிதன் - News View

Breaking

Wednesday, November 24, 2021

வேற்றுக்கிரகவாசியாக மாற விரும்பும் விசித்திர மனிதன்

வேற்றுக்கிரக வாசிபோல் தம்மை உருமாற்றிக் கொள்ள விரும்பும் பிரான்ஸ் நாட்டு ஆடவர் ஒருவர் தனது கை விரல்களை அகற்றியுள்ளார்.

33 வயதான அன்டனி லொப்ரடோர் என்ற அந்த ஆடவர் ஏற்கனவே தனது நாக்கை பிளந்து, தலை முதல் கால் வரை பச்சை குத்தி, துளையிட்டிருப்பதோடு தனது காது, உதடு மற்றும் மூக்கைக் கூட வெட்டி அகற்றியள்ளார். 

எனினும் தனது உருமாற்றத்தில் இதுவை 34 வீதத்தை மாத்திரமே அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வேற்றுக்கிரகவாசியின் விரல்கள் போன்று இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் தனது இடது கையின் இரு விரல்களை அகற்றிக் கொண்டுள்ளார்.

தனது உருமாற்றம் பற்றிய முன்னேற்றங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். அந்தப் பக்கத்தை 718,000 பேர் பின்தொடர்கின்றனர்.

இந்த சர்ச்சைக்குரிய செயற்பாட்டுக்கு அவர் மீது கடும் விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன.

தனது தோலை முழுமையாக அகற்றி உலோகத்தால் மாற்ற விரும்புவதாக குறிப்பிட்டிருக்கும் அவர் தனது கைகள், கால்கள், விரல்கள் மற்றும் தலையின் பின்புறத்தில் அடுத்த மாற்றங்களை செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment