கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்தவாறு பிரதமரை நியமித்த செக் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்தவாறு பிரதமரை நியமித்த செக் ஜனாதிபதி

செக் குடியரசின் எதிர்க்கட்சித் தலைவர் பீட்ரே பியாலா அந்நாட்டின் புதிய பிரதமராக ஜனாதிபதி மிலோஸ் செமானினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட செமான், தனது வாசஸ்தலத்தில் கண்ணாடிப் பெட்டி ஒன்றுக்குள் இருந்து இந்த நியமனத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பாதுகாப்பு அம்சங்களுடன் மருத்துவமனை பணியாளர்களினால் சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்ட நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் இந்த நிகழ்வில் தோன்றினார். 

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் இரண்டு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட வேண்டும் என்று செக் நாட்டு விதிகள் குறிப்பிட்டுள்ளன.

செக் நாட்டு அரசியலமைப்பின்படி ஜனாதிபதியே அரச தலைவராக இருந்தபோது புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பேச்சுவார்த்தைக்கு தலைமை வகிப்பார்.

இந்நிலையில் கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலில் பதவியில் இருந்த பிரதமர் அன்ட்ரேஷ் பபிஸை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எதிர்பாராத வெற்றியை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment