ரஞ்சன் ராமநாயக்கவிடம் கையடக்கத் தொலைபேசி : மூவரடங்கிய சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை - News View

Breaking

Monday, November 22, 2021

ரஞ்சன் ராமநாயக்கவிடம் கையடக்கத் தொலைபேசி : மூவரடங்கிய சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கவிடம் கையடக்கத் தொலைபேசி மற்றும் 'hands free' ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அவரை மூவர் கொண்ட சிறைத் தீர்ப்பாயத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் வைத்து, ரஞ்சன் ராமநாயக்கவின் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment