இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டின் முன்னால் அவரது மெய்ப்பாதுகாவலர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏசி ரிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது .
குறித்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த பாலசுந்தரத்தின் தாய் தந்தையர் கண்ணீர் விட்டு இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை காலை வழக்கு விசாரணைக்கு 08.00 மணியளவில் நாங்கள் வந்திருந்த போதும் எங்களுடைய வழக்கு தாமதமாகவே கூட்டப்பட்டது நாங்கள் எதிர்பார்ப்பது என் மகனுடைய கொலைக்கான நீதி கிடைக்க வேண்டும்.
நீதிபதி ஐயா 15ஆம் திகதி விளக்கம் பெறப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார் இருந்த போதிலும் எங்களை மாறி மாறி ஒவ்வொரு இடம் அலைய வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
உடல் கூற்று பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்றதாக இன்று நீதிபதி ஐயா எங்களிடம் கேட்டபோது நாங்கள் மட்டக்களப்பு பொலிஸாரிடம் சென்றபோது ஏறாவூர் பொலிஸாரிடம் கேட்குமாறு கூறுகின்றார்கள்.
மட்டக்களப்பு பொலிசார் இவ்வாறு எங்களை அங்கேயும் இங்கேயும் அழையவைத்து கொண்டே இருக்கின்றார்கள்.
திட்டமிட்டு எனது மகனை அடித்து சுட்டு கொலை செய்துவிட்டு இன்று எங்களை நாய் போன்று அழைய வைக்கின்றார்கள்.
எனது மகன் பிழை செய்திருந்தால் அவர்களது சிசிடிவி கேமராவில் உள்ள வீடியோக்களை காட்டலாம் தானே எங்களது மகன் பிழை செய்திருந்தால் நாங்கள் அதை ஒத்துக் கொள்ள தயாராக இருக்கின்றோம். சும்மா போன எனது மகனை பிடித்து வைத்து அடித்துக் கொலை செய்துவிட்டு இப்படியே அழைய விடுகின்றனர்.
இன்று 5 மாதங்கள் கடந்து விட்டது நாங்கள் நீதிபதி நல்லதொரு முடிவை தருவார் என எதிர்பார்க்கின்றோம் என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கிக்கின் சந்தேகநபர் 14 நாட்கள் மேலும் விளக்கமரியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
கேசரி
No comments:
Post a Comment