தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஆறு நாட்டு பயணிகள் இலங்கைக்குள் நுழைய தடை - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஆறு நாட்டு பயணிகள் இலங்கைக்குள் நுழைய தடை

இன்று நள்ளிரவு முதல், தென்னாபிரிக்கா, பொட்சுவானா, லெசதோ, நமீபியா, சிம்பாப்வே, சுவாசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படுவதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை குறித்த தடையுத்தரவு அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள அதிக அவதானம் மிக்க 'Omicron' கொவிட்-19 வைரஸ் திரிபு பரவல் அவதானம் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிசார சபை அறிவித்துள்ளது.

கடந்த 14 நாட்களில் குறித்த நாடுகளுக்கு பயணித்தவர்கள், அந்நாடுகள் ஊடாக வந்தவர்களுக்கு இத்தடை பொருந்துமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே இந்நாடுகளிலிருந்து வந்துள்ளவர்கள் தங்களைத் தனிமைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், உரிய பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment