நைஜரில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மேயர் உட்பட 69 பேர் பலி - News View

Breaking

Friday, November 5, 2021

நைஜரில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மேயர் உட்பட 69 பேர் பலி

நைஜரின் தென்மேற்கு பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மேயர் உட்பட குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக நம்பப்படும் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டதற்கு நைகரில் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் இரண்டு நாள் தேசிய துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலி நாட்டுடனான தென்மேற்கு எல்லைப் பகுதியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் உள்ளூர் மேயர், தற்காப்பு ஆயுதக் குழு தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. உயிர் தப்பியவர்களை தேடும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.


தாக்குதல்தாரிகள் எல்லை கடந்து மாலி நாட்டுக்குள் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் தமது உயிரிழந்தவர்களையும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர்.

நைகர் தனது மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜீரிய எல்லைகளில் ஜிஹாதி ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.

இவ்வாறான வன்முறைகளில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் 500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment