உள்ளூர் பால் மாக்களின் விலைகளும் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 15, 2021

உள்ளூர் பால் மாக்களின் விலைகளும் அதிகரிப்பு

தேசிய உற்பத்திகளான ஹைலண்ட் (Highland) மற்றும் பெல்வத்த (Pelwatte) பால் மாக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அந்த வகையில், 400 கிராம் ஹைலண்ட் பால் மா பொதியின் விலை ரூ. 90 இனாலும், ஒரு கிலோ கிராம் பொதியின் விலை ரூ. 225 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மில்கோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஹைலண்ட் 400 கிராம் பொதியின் புதிய விலை ரூ. 470 ஆகவும், ஒரு கிலோ கிராம் பொதியின் விலை ரூ. 1,170 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெல்வத்த நிறுவனம் பால் மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெல்வத்த 400 கிராம் பால் மா பொதியின் விலை ரூ. 380 இலிருந்து, ரூ. 460 ஆக ரூ. 80 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களின் விலையை: 1 கிலோ ரூ. 250; 400g ரூ. 100 இனால் அதிகரிக்க, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment