தெற்காசிய மேசைப்பந்தாட்ட சம்மேளன தலைவராக முதல்முறையாக இலங்கையர் தெரிவு - News View

Breaking

Tuesday, October 5, 2021

தெற்காசிய மேசைப்பந்தாட்ட சம்மேளன தலைவராக முதல்முறையாக இலங்கையர் தெரிவு

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தெற்காசிய மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் போட்டியின்றி தெரிவானார்.

ஆசிய மேசைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கட்டாரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 3 ஆம் திகதியன்று நடைபெற்ற ஆசிய மேசைப்பந்தாட்ட சம்மேளன நிர்வாகக் குழுவுக்கான தேர்தலுடன், தெற்காசிய மேசைப்பந்தாட்ட சம்மேளன நிர்வாகக் குழுவுக்கான தேர்தலும் நடைபெற்றது.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெற்காசிய மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தெரிவாகியிருந்தார். இந்த பதவியில் இலங்கையரொருவர் தெரிவாகியமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

இலங்கையரான சந்தன பெரேரா, இதற்கு முன்னர் தெற்காசிய மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவில் உப தலைவராகவும், பொதுச் செயலாளராகவுமே செயற்பட்டிருந்தார்.

இராஜாங்க அமைச்சரான கனக ஹேரத், 2019 இலிருந்து இலங்கை மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment