திருமணத்துக்காக சேமித்த பணத்தில் வறிய குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுத்த இளம் ஜோடி : இலங்கையில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 24, 2021

திருமணத்துக்காக சேமித்த பணத்தில் வறிய குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுத்த இளம் ஜோடி : இலங்கையில் சம்பவம்

திருமணத்துக்காகச் சேமித்த 20 இலட்சம் ரூபா பணத்தில் வறுமை கோட்டில் வாழும் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளனர் இளம் தம்பதியினர்.

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் யுவதியும் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். 

குறித்த இளைஞன் மக்கள் வங்கியிலும் அவரது காதலி ஆயுர்வேத வைத்தியராகவும் பணியாற்றி வருகிறார்கள்.

பிரபல ஹோட்டல் ஒன்றில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு இரண்டு குடும்பத்தினரும் தீர்மானித்திருந்தனர்.

எனினும் ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து பணத்தை வீணடிப்பதற்குப் பதிலாக வறுமையிலுள்ள குடும்பம் ஒன்றுக்கு உதவுவதற்கு இருவரும் தீர்மானித்தனர்.

அதற்கமைய கணவனை இழந்த 3 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

தங்கள் திருமணத்துக்காகச் சேமித்த பணத்தைக் கொண்டு அவர்கள் இந்த வீட்டை நிர்மாணிக்க ஆரம்பித்தனர். தற்போது வீடு நிர்மாணிக்கப்பட்டு அக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment