முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - News View

About Us

About Us

Breaking

Friday, October 1, 2021

முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியில் முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில் வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாற்றுத்திறனாளியான 50 வயதுடைய செல்மென்ட் ஷிவாலா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் தனது பதவிக் காலம் முடிவடையும் சமயத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய சில மாதங்களில் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால், விபத்துக்குள்ளான காரை சீர் செய்வதற்கான செலவை பாராளுமன்றம் தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து வந்தார்.

ஆனால், அந்த சமயத்தில் காருக்கான இழப்பீட்டை அவர் புதிப்பிக்காததால் அது காலாவதியானது. இதனால், காருக்கான செலவை ஏற்க முடியாது என்று செல்மெண்ட் ஷிவாலாவின் கோரிக்கையை பாராளுமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்திற்கு நேற்று சக்கர நாற்காலியில் வருகை தந்த செல்மென்ட் ஷிவாலா, தனது காரை சீர் செய்வதற்கான செலவை பாராளுமன்றம் ஏற்காததால் மனவேதனை அடைந்து தான் மறைத்து கொண்டுவந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பாராளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment