கோதுமை மா, சீமெந்து விலைகளும் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

கோதுமை மா, சீமெந்து விலைகளும் அதிகரிப்பு

பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகிய பொருட்கள், கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான வர்த்தமானியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று (11) முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதன் கட்டுப்பாட்டு விலை ரூ. 87 என நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 50kg சீமெந்து பொதியின் விலை ரூபா 93 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அந்த வகையில் சீமெந்து பொதியின் விலை ரூ. 1,005 இலிருந்து ரூ. 1,098 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில் Litro நிறுவனம் மற்றும் Laugfs நிறுவனம் ஆகியன சமையல் எரிவாயு விலைகளை அதிகரித்திருந்தது.

ஏற்கனவே பால் மா விலைகளை அதிகரிப்பதாக பால் மா இறக்குமதியாளர்களின் சங்கமும், அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பில் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டு அதி விசேட வர்த்தமானி வருமாறு

No comments:

Post a Comment