கல்முனையில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக் குஞ்சி - News View

About Us

About Us

Breaking

Friday, October 1, 2021

கல்முனையில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக் குஞ்சி

மாளிகைக்காடு நிருபர்

அம்பாறை மாவட்டம் கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வீட்டு உரிமையாளரால் நாட்டுக் கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நான்கு கால்களை உடைய 2 நாட்களேயான இக்கோழிக் குஞ்சு பார்ப்பதற்கு அரிதாக பிறந்துள்ளது.

ஏழு கோழிக் குஞ்சுகள் பிறந்துள்ள நிலையில் அதில் ஒன்றே இவ்வாறு பிறந்துள்ளது என வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

இந்த கோழிக் குஞ்சை பார்வையிட அயலவர்கள் ஆவலுடன் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment