AY.4.2, "டெல்டா ப்ளஸ்" குறித்து இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 24, 2021

AY.4.2, "டெல்டா ப்ளஸ்" குறித்து இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை

AY.4.2, "டெல்டா ப்ளஸ்" என்று அழைக்கப்படும் கொவிட்-19 வைரஸின் புதிய பிறழ்ந்த வடிவம் வழமையான டெல்டாவை விட எளிதாக பரவக்கூடியது என்று இங்கிலாந்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்ட புதிய 'AY.4.2" என்ற டெல்டா மாறுபாட்டின் புதிய பிறழந்த வடிவம் "டெல்டா ப்ளஸ்" என்று அழைக்கப்பட்டது.

தற்போது அது VUI-21OCT-01 என இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனத்தினால் (UKHSA) பெயரிடப்பட்டுள்ளது.

இது ஆதிக்கம் செலுத்தும் டெல்டா வகையை விட மிக வேகமாக பரவியதற்கான சான்றுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், சமீபத்திய நாட்களில் நெருக்கமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment