48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு லெபனான் தூதுவருக்கு சவூதி அரேபியா காலக்கெடு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 30, 2021

48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு லெபனான் தூதுவருக்கு சவூதி அரேபியா காலக்கெடு

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமனில் ஆக்கிரமிப்பாளராக இருப்பது போலத் தோன்றுகிறது என, லெபனான் நாட்டின் தகவல்த்துறை அமைச்சர் கடந்த வாரம் ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில் கூறினார்.

ஆனால் அந்த நேர்காணல் கடந்த ஆகஸ்ட் மாதம், அவர் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டது.

மேலும் யேமன் நாட்டில் சவூதி அரேபியா முன்னெடுக்கும் ராணுவ நடவடிக்கைகள் பலனற்றவை என்றும், ஹூதி கிளர்ச்சிக் குழுவினர் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் லெபனான் தகவல்த்துறை அமைச்சர் ஜார்ஜ் கோர்தாஹி அந்நேர்காணலில் கூறி இருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், சவூதி அரேபியாவில் உள்ள லெபனான் நாட்டின் தூதுவரை அடுத்த 48 மணி நேரத்துக்குள் வெளியேற உத்தரவிட்டுள்ளது சவூதி அரேபியா.

கொர்தாஹியின் கருத்து லெபனான் அரசின் நிலைப்பாடு அல்ல என விளக்கமளித்தது லெபனான் தரப்பு.

மேலும் சவூதியின் இந்த முடிவு வருத்தமளிப்பதாகவும், சவூதி இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் என நம்புவதாகவும் கூறியுள்ளார் லெபனான் பிரதமர்.

No comments:

Post a Comment