நைஜீரியாவில் 43 பேர் சுட்டுக் கொலை : பயங்கரவாதிகள் அட்டூழியம் - News View

Breaking

Tuesday, October 19, 2021

நைஜீரியாவில் 43 பேர் சுட்டுக் கொலை : பயங்கரவாதிகள் அட்டூழியம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ராணுவம் போராடி வருகிறது.


இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதோடு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடமேற்கு மாகாணம் சோகோட்டோவில் உள்ள கோரோனியோ நகருக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதலை நடத்தியதில் 30 பேர் கொன்று குவிப்பட்டனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் சோகோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

மோட்டார் சைக்களில் வந்த 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியத்தால் பெண்கள், சிறுவர்கள் உட்பட 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

No comments:

Post a Comment