'கோழி இரத்தம்' குழந்தைகளுக்கு செலுத்தும் சீனா - News View

About Us

About Us

Breaking

Friday, September 24, 2021

'கோழி இரத்தம்' குழந்தைகளுக்கு செலுத்தும் சீனா

சீன பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ‘தலைசிறந்த குழந்தையாக' மாறி ஒவ்வொரு துறையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சிக்கன் பேரண்டிங் (Chicken Parenting - கோழி குழந்தை வளர்ப்பு) எனும் கோட்பாட்டை மேலானதாகக் கருதி பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.

சிக்கன் பேரண்டிங் என்பது குழந்தை வளர்ப்பில் ஒருவித முட்டாள்தனமான பாணியைக் குறிக்கிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கோழி இரத்த ஊசி ஏற்றி வருவதோடு குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை, உட்பட அனைத்து சுகாதார பிரச்சினைகளையும் இது குணப்படுத்தும் என்று கருதுவதாக 'சிங்கப்பூர் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கோழி இரத்த ஊக்கி, கல்வித் துறையிலும் விளையாட்டிலும் திறமை செலுத்த குழந்தைகளின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. 

சுப்பர் சைனா.கொம் 'கோழி குழந்தை' என்ற கோட்பாட்டை அறிமுகம் செய்துள்ளதோடு இது நாட்டில் மிகவும் பிரபலமாகியுள்ளது. 

குறிப்பாக பெய்ஜிங், சங்ஹாய் மற்றும் குவாங்தோ போன்ற நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்க சீன பெற்றோர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

சிக்கன் பேரண்டிங் பாணி அமெரிக்காவில் இருக்கும் "ஹெலிகாப்டர் குழந்தை வளர்ப்பை" போலவே உள்ளது.

இந்த வகையான பாணியில் குழந்தைகளை வளர்ந்து வரும் பெற்றோர்கள், தமது பிள்ளை பாடசாலை செல்வது மட்டும் போதுமானதல்ல என்று நம்புகிறார்கள், நல்ல தரங்கள் மற்றும் எல்லோரும் சமமாக நன்றாக செயல்படுவது என்பன போதுமானதல்ல எனவும் கருதுகின்றனர். இதனால் குழந்தைகளிடமிருந்து எதிர்பார்ப்புகளின் சுமை இப்போது அதிகரித்துள்ளது. சீன இளைஞர்களிடையேயான மனச்சோர்வு கணிசமாக அதிகரித்துள்ளது.

2019 தேசிய மனநல அபிவிருத்தி அறிக்கைப் பிரகாரம் 25 வீதமான சீன இளம் பருவத்தினர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 7.4 சதவிகிதத்தினர் கடுமையான மன அழுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகவும் சிங்கப்பூர் போஸ்ட் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், சீனாவின் சிறு வயதினரிடையே கிட்டப்பார்வை கோளாறு விகிதம் உலகில் ஏனைய நாடுகளிடையே உயர்ந்த இடத்தில் உள்ளது.

அந்நாட்டு தேசிய சுகாதார ஆணைக்குழு அறிக்கைப்படி 71 சதவீத நடுத்தர வகுப்பு பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர் 81 சத விகித உயர்தர வகுப்பு பாடசாலை மாணவர்களிடையேயும் இந்தக் குறைபாடு அடையாளங் காணப்பட்டுள்ளது.

இந்த 'சிக்கன் பேரண்டிங்' பாணி சீனாவில் காணப்படும் தீவிர போட்டியை விவரிக்கும் ஒரு சொல் என சில அவதானிகள் கருதுகின்றனர். இந்த இடைவிடாத போட்டியில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் அவர்களின் நிறைவேறாத கனவுகளை தமது குழந்தைகள் மூலம் நிறைவேற்றவும் சீன பெற்றோர் எதிர்பார்ப்பதாக சிங்கப்பூர் போஸ்ட் கூறுகிறது.

No comments:

Post a Comment