ஆப்கன் எல்லை பாதுகாப்பு குறித்து கவலை கொள்ளும் பாகிஸ்தான் - News View

Breaking

Wednesday, September 1, 2021

ஆப்கன் எல்லை பாதுகாப்பு குறித்து கவலை கொள்ளும் பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு தலிபான்கள் அங்கு புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த நாட்டின் பாதுகாப்பு குறித்து அதன் அண்டை நாடான பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது.

குறிப்பாக தலிபான் போராளிகள் மீதே பாகிஸ்தான் தனது கவலையை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானைக் கடந்து வந்து தங்களுடைய எல்லை பகுதியில் யார் கொடிய தாக்குதல்களை நடத்துவார்கள் என்ற அச்சம் அந்த நாட்டை குடிகொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக ஜிஹாதிகளின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காபூல் விமான நிலையம் அருகே சமீபத்தில் நடத்தப்பட்ட இரட்டை தாக்குதலுக்குப் பிறகு அந்த கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன.

100 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட அந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழு பொறுப்பேற்றுள்ளது. இதில் சுமார் 13 அமெரிக்க வீரர்களும் அடங்குவர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய எல்லைத் தாக்குதலில் தங்களின் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே, அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானவை. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது என்றும் பாகிஸ்தான் மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment