இராஜினாமா செய்யும் கப்ராலின் இடத்திற்கு, பசிலுக்கு இடம் விட்டு இராஜினாமா செய்த ஜயந்த கெட்டகொட - News View

Breaking

Monday, September 13, 2021

இராஜினாமா செய்யும் கப்ராலின் இடத்திற்கு, பசிலுக்கு இடம் விட்டு இராஜினாமா செய்த ஜயந்த கெட்டகொட

வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரலின் இடத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நியமிக்கப்படவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

2020 பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியில் மூலம் பாராளுமன்றத்திற்கு நுழைந்த கெட்டகொட, பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்புரிமைக்காக ஜூலை மாதம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதேவேளை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அஜித் நிவாட் கப்ரல், பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை இன்று (13) பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கவுள்ளார்.

பதவி விலகவுள்ள அஜித் நிவாட் கபரல் வியாழன்று இரண்டாவது முறையாக மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment