(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் கொரோனா தொற்றின் காரணமாக வழமைக்கு மாறாக அதிகளவு கர்ப்பிணிகளின் உயிரிழப்பதை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மேம்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் நாட்டில் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் 7000 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 6,000 பேர் மூன்றாம் அலையில் தொற்றுக்கு உள்ளானவர்கள் என்றும் வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இதுவரையில் 55 கர்ப்பிணிகள் தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment