ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதார அமைச்சருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 22, 2021

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதார அமைச்சருக்கு கொரோனா

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற, பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மார்செலோ குவெரோகோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மார்செலோ குவெரோகோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுடன், நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக தொழில் முதலீட்டாளர்களை, பிரேசில் சுகாதாரத்துறை மார்செலோ குவெரோகோ சந்தித்துப் பேசினார். 

மேலும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சந்தித்த போது, அமைச்சர் மார்செலோ குவெரோகோவும் உடன் இருந்தார்.

இதை அடுத்து அமைச்சர் மார்செலோ குவெரோகோவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. முடிவில், அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்செலோ குவெரோகோ, சீனாவின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் தன்னைத்தானே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நியூயார்க்கில் இருந்து நாடு திரும்பும் தனது குழுவினருடன் தான் திரும்பப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment