ஒலிம்பிக் வீரர்களுக்கு தானே உணவு சமைத்து பரிமாறிய பஞ்சாப் முதல்வர் : வீடியோ - News View

Breaking

Thursday, September 9, 2021

ஒலிம்பிக் வீரர்களுக்கு தானே உணவு சமைத்து பரிமாறிய பஞ்சாப் முதல்வர் : வீடியோ

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது கையால் உணவு சமைத்து பரிமாறியுள்ளார். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பஞ்சாப் அரசு சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பஞ்சாப் மாநில வீரர்களுக்கு பாராட்டு மற்றும் விருந்தளிக்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை, பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்கே சமைத்ததாக அம்மாநில அரசு தெரிவித்ததுடன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.

இந்த விருந்தில், ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment