இத்தாலிக்கு பயணமானார் பிரதமர் மஹிந்த - News View

Breaking

Friday, September 10, 2021

இத்தாலிக்கு பயணமானார் பிரதமர் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை குழுவினர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை இத்தாலிக்கு பயணமாகியுள்ளனர்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டே பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad