அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் வாகனங்கள் வவுனியாவில் மடக்கிப் பிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 22, 2021

அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் வாகனங்கள் வவுனியாவில் மடக்கிப் பிடிப்பு

முறையான வழி அனுமதிப் பத்தரமின்றி மண் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் வாகனங்கள் வவுனியா வனதுறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளன.

இன்று (22) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஏ9 வீதியின் ஊடாக நகரப்பகுதியில் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்கள் வவுனியா வனத்துறை அதிகாரிகளால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

இதன்போது 4 டிப்பர் வாகனங்கள் முறையான வழி அனுமதிப் பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்றமை கண்டு பிடிக்கப்டபட்டது.

இதனையடுத்து, குறித்த 4 டிப்பர் வாகனங்களும் வனத்துறை அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் சாரதிகள் 4 பேரும் கைது செய்ப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

No comments:

Post a Comment