விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் நான்கு மாநிலங்களில் ஞாயிறன்று பிள்ளையார் சிலைகளை நீர் பரப்புக்களில் மூழ்கடிக்க முயன்றபோது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் எட்டு பேரும், ராஜஸ்தானில் 2 பேரும், மகாராஷ்டிராவில் ஒருவரும் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஐந்து பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில், ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து பேர், கல்யாணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் பிந்த், ராஜ்கர் மற்றும் சாட்னா மாவட்டங்களில் பதிவான தனித்தனி சம்பவங்களில் பிள்ளையார் சிலைகளை மூழ்கடிக்க முயன்றபோது 9 - 17 வயதுக்குட்பட்ட குறைந்தது எட்டு சிறுவர்கள் இறந்தனர்.
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள குளமொன்றில் பிள்ளையார் சிலைகளை மூழ்கடிக்க முயன்றபோது இருவர் உயிரிழந்துள்ளனர். மங்களியாவாஸ் பகுதியில் உள்ள பண்ணையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பண்ணை உரிமையாளர் அபிஷேக் (35) மற்றும் ராஜ்குமார் (30) என்ற மற்றொரு நபருமே சிலையை மூழ்கடிக்கும் போது குளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா
ஞாயிற்றுக்கிழமை மாலை புனே நகருக்கு அருகிலுள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாட், ஆலந்தி சாலை பகுதியில் உள்ள பிள்ளையார் சிலையை மூழ்கடிக்க முயன்றபோது 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது மேலும் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
No comments:
Post a Comment