ஆண்டு இறுதிக்குள் பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகளுக்கு முடிவு, குற்றச்சாட்டு இல்லையெனில் விடுவிக்கவும் ஏற்பாடு - News View

About Us

About Us

Breaking

Monday, August 9, 2021

ஆண்டு இறுதிக்குள் பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகளுக்கு முடிவு, குற்றச்சாட்டு இல்லையெனில் விடுவிக்கவும் ஏற்பாடு

இந்த ஆண்டு இறுதிக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் நிறைவடையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து நிலுவையில் உள்ள அல்லது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என தலைமை நீதிபதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்கவும் குற்றச்சாட்டுகள் இல்லை என்றால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அலி சப்ரி தெரிவித்தார். 

இருப்பினும் குறிப்பிட்ட வழக்குகளில் குறித்து தனிப்பட்ட முறையில் கருத்து கூற முடியாது என குறிப்பிட்ட அமைச்சர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில சரத்துக்களை திருத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment