ஜெர்மனி ஊடகவியலாளரின் உறவினரை சுட்டுக் கொன்ற தலிபான்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, August 20, 2021

ஜெர்மனி ஊடகவியலாளரின் உறவினரை சுட்டுக் கொன்ற தலிபான்கள்

டாய்ச்ச வில்லே என்ற ஜெர்மனி அரசுக்கு சொந்தமான ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு பத்திரிகையாளரின் நெருங்கிய உறவினர் ஒருவரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அப்பத்திரிகையாளர் தற்போது ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். அப்பத்திரிகையாளருக்காக நடத்தப்பட்ட சோதனையில் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், மற்றொரு உறவினர் படுகாயமடைந்துள்ளார்.

இவரைப் போலவே இன்னும் மூன்று டாய்ச்ச வில்லே ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை தலிபான்கள் வீடுவீடாக தேடி வருகின்றனர்.

தலிபான்களின் கொலை நடவடிக்கையை டாய்ச்ச வில்லேவின் இயக்குநர் பீட்டர் லிம்பார்க் கண்டித்துள்ளார். 

மேலும் "ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் தங்கள் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர ஆபத்தில் இருக்கிறார்கள்" எனவும் கூறியுள்ளார்.

"காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் தலிபான்கள் முறையாக பத்திரிகையாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. நமக்கு நேரம் குறைவாகத்தான் இருக்கிறது" என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment