ஆப்கானிஸ்தானில் தற்போது ஆயுதப்போரை விட சிந்தனைப் போரயே கண்டுகொண்டிருக்கிறோம் - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் - News View

About Us

About Us

Breaking

Friday, August 20, 2021

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆயுதப்போரை விட சிந்தனைப் போரயே கண்டுகொண்டிருக்கிறோம் - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

ஆப்கானிஸ்தானின் மகளிர் வலையமைப்பின் ஸ்தாபகர் மஹ்பூபா சிராஜ் அண்மையில் சர்வதேச அலைவரிசை ஒன்று எழுப்பிய கேள்விக்கு வழங்கிய பதிலை மேற்கோள்காட்டியே இந்த விடயத்தை ஆரம்பிக்கிறேன். அவருடைய பதிலின் உணர்ச்சி, நாட்டின் எதிர்காலம் குறித்து வைத்திருந்த கனவு சிதைவடைந்துள்ளமையால் உருவாகியுள்ள தாக்கம் என்பன உள்ளடங்கியிருக்கின்றன என்பன சக்தி வாய்ந்த செய்தியாகும்.

கேள்வி இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கா, நேட்டோ நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு வழங்க வேண்டிய செய்தி என்ன?

புதில் உங்களிடம் தற்போது கதைத்து எந்தப் பலனும் இல்லை. கதைக்க வேண்டிய காலம் முடிவடைந்து விட்டது. நாங்கள் உங்களிடம் கதைத்தோம். வேண்டுகோள் விடுத்தோம். தாழ்மையாக வேண்டினோம். ஆனால் இங்குள்ள யார் குறித்தும் எந்த அக்கறையும் இல்லாமல் தான் நீங்கள் முடிவெடுத்தீர்கள்.

நாங்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கட்டியெழுப்பிய அனைத்தையும் நீங்கள் ஒரு கணப்பொழுதில் ஒரு முடிவில் அழித்து விட்டீர்கள். இந்த ஒரு தீர்மானம் ஆப்கானிஸ்தானை இரு நூறு வருடங்களுக்கு பின்னோக்கி தள்ளியுள்ளது. இன்று இருக்கின்ற எமது பரம்பரை மாத்திரமல்ல இன்றும் எத்னையோ பரம்பரையை நீங்கள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளீர்கள்.

தற்போது உங்களுக்கு என்ன சொல்ல வேண்டியிருக்கின்றது. நீங்கள் ஆப்கானிஸ்தானுக்கு எமது வலய நாடுகளுக்கும் செய்துள்ள வேலையை நினைத்து நீங்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும். எங்களுடைய நாடுகளை நீங்கள் ஏன் அழித்தொழிக்கின்றீர்கள் என்பது குறித்து எங்களால் அறிந்துகொள்ள முடியாதுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆயுதப் போராட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. தற்போது அதற்குப் பதிலாக ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு எமது நாடு சர்வதேசத்துடன் சிந்தனைப் போரை முன்னெடுக்க வேண்டும். இந்த சிந்தனைப் போர் ஆப்கானிஸ்தானின் எதிர்கால பயணத்தை இலக்காகக் கொண்ட ஒரு போர்.

எமது நாட்டு அரசியல் மாத்திரமல்ல சர்வதேச அரசியலிலும் காண்கின்ற ஒரு விடயம் என்னவென்றால் இன்று அரசியல் எதிரிகளாக இருக்கின்றவர்கள் நாளை சிறந்த நண்பர்களாக மாறிக்கொள்வது தான்.

தமது தாய் நாட்டின் விடுதலைக்காக கம்யூனிச ரஷ்யாவுடன் போராடிய ஆப்கானியர்கள் அன்று அமெரிக்காவை தமது நட்பாகவே பார்த்தார்கள். ஆனால் இன்று ரஷ்யா தலிபான்களின் நண்பராக மாறியிருக்கின்றது. தலிபான்களை தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்குமாறு இன்று ரஷ்யா கோரிக்கை முன்வைக்கின்றது. சுன்னி ஷீயா என்ற கொள்கை ரீதியான பிரிவினால் மாற்றுக்கருத்து கொண்டிருந்த ஈரான் இன்று தலிபான்களுடன் நட்புறவுகளை பேணிக்கொள்வதற்கான பேச்சு வார்த்ததையில் ஈடுபட்டிருக்கின்றது.

சர்வதேச வல்லரசுப் போட்டியில் உலக களப்பயிற்சி முகாமாக மாறி அடிக்கு மேல் இடி விழுந்து பல தசாப்தங்களாக இறையாக மாறியுள்ள ஆப்கானிஸ்தான் மீது இன்று முழு உலகத்தின் அவதானமும் இருக்கின்றது.

சோவியத் வியாபித்து நின்ற போது ஆப்கானின் நிர்வாகம் சோவியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கைப்பொம்மையாகவே இருந்தது. அதன் பின்னர் தாய் மண்ணின் விடுதலைக்காக முன்னெடுத்த போராட்ட வெற்றியின் பின்னர் சோவியத்தின் கைப்பொம்மைகளாக இருந்தவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போதும் ஆப்கானிஸ்தான் ஆதிக்கவாதிகளின் ஏகாதிபத்தியவாதிகளின் மயானம் என சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

அதன் பின்னர் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை அடிபணியச் செய்து அடக்குமுறை ஆட்சியை நடத்தியது. இரண்டு தசாப்த போராட்டத்தின் பின்னர் அமெரிக்க இராணுவத்திற்கும் அமெரிக்காவும் அமெரிக்காவுக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்த நிர்வாகிகளுக்கும் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

சுதந்திர விடுதலைப் போராட்டங்களின் போது உலகின் சிறந்த வல்லரசுகள் தோல்வியடைந்து நாட்டை விட்டு வெளியேறுகின்ற போது காண்கின்ற உணர்ச்சி வெளிப்பாட்டை நாம் எமது மாணவப் பருவத்தில் வியட்நாம் போராட்டத்தில் கண்டோம். அதே போன்று அன்று சோவியத் ரஷ்யா ஆப்கானை விட்டுச் செல்கின்ற போது நாம் கண்ட அதே விடயங்களை இன்றும் காண்கின்றோம்.

இன்று ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தலிபான்களிடம் ஆரம்பத்தில் காணப்பட்ட அடிப்படைவாதக் கொள்கை, தன்மை என்பன தற்போது மாறு பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. சர்வதேசத்துடன் அவர்கள் மேற்கொள்ள முயற்சின்ற உறவுகள் நடவடிக்கைகள் என்பன பிரதிபலிக்கின்றன. ஆனால் அவர்களின் எதிர்கால நடவடிக்கைகள் செயற்பாடுகள் என்பவற்றை அடிப்டையாக வைத்தே அதை உறுதி செய்ய முடியும்.

தலிபான்கள் சுன்னி முஸ்லிம்களான ஈரானோடு முறுகள் நிலையை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக சில ஊடகங்கள் கருத்து வெளியிட்டாலும் இன்று அதற்கு மாற்றமான ஒரு நிலையைக் காணக்கூடியதாக உள்ளது.

ஷீயாக்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகின்ற வடக்கு ஆப்கான் பகுதிகளில் உள்ள தலைவர்களின் ஒத்துழைப்புக்களைப் தலிபான்களால் பெற்றுக்கொள்வதற்கு முடியுமாகியுள்ளதாக தற்போது ஊடகங்கள் தெரிவிக்கின்ற.

மறுபுறம் சீனாவுடன் மோதல் ஏற்படும் என்று சில ஊடகங்கள் எதிர்வு கூறினாலும் இன்று சீனத் தலைவர்கள் தலிபான் பிரதிநிதிகளை சீனாவுக்கு அழைத்து பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் சீனூவில் இன்று ஏற்பட்டுள்ள நிலை குறித்தும் அறிய முடிகின்றது.

ஒவ்வொரு விதமான செய்திகள் புரளப்பட்டாலும் பாகிஸ்தானுக்கும் தலிபான்களுக்குமிடையில் காணப்பட்ட தவறான புரிதல்களை மறந்து சிறந்த புரிந்துணர்வை தற்போதுள்ள ஆப்கான் நிர்வாகத்தோடு ஏற்படுத்திக்கொள்வதற்கு பாகிஸ்தான் முன்வந்துள்ளதாக அந்த நாட்டு தலைவர்களின் செய்தி எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

இந்தியாவின் சான்றுகளும் இங்கு முக்கியமானவை. ஆப்கானிஸ்தான் மக்களுக்காக இந்தியா முன்னெடுத்த அனைத்து செயற்பாடுகளையும் நாம் வரவேற்கின்றோம் என காபூல் தலைநகருக்குள் தலிபான்கள் புக முதல் நாள் தலிபான் பேச்சாளர் சுஹைல் ஷஹீன் குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேசத்தில் ஆயதப் போரைவிட சிந்தனைப் போர் வீரியமானது என்பதை இவற்றின் ஊடாக எமக்கு தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் காணப்டக்கூடிய அடையாளங்கள், நம்பிக்கைகள், மதிப்புக்கள், மேலாண்மைகள், என்பவற்றை கருத்திற்கொள்ளாது முழு உலகமும் ஒரே கலாசாரத்தின் கீழ், ஒரே சமூக பொருளாதார முறையின் கீழ் செயற்பட முயற்சித்தல், ஏகாதிபத்திய சிந்தனைப் போக்கு, செயற்பாடு, என்பவற்றை அதே முறையில் செயற்படுத்துதல் மற்றும் பின்பற்றுதல் என்பன இன்றைய யுகத்திற்கு பொருத்தமான ஒன்றல்ல என்பதை உலகிற்கு இரண்டு முறை எடுத்துக்காட்டிய இடம் தான் ஆப்கானிஸ்தான். தமது சிந்தனைப் போக்கு மற்றும் செயற்பாடு என்பவற்றை இன்னுமொரு சமூகத்திற்கு பலவந்தமாக புகுத்த முடியாது என்பதை அமெரிக்க, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கும் தலிபான்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பெண்களின் கல்விக்கு கட்டுப்பாடு விதித்தல் மற்றும் மாற்று சிந்தனையை உருவாக்குதல் மாணவ உலகத்தால் அனுமதிக்க முடியாத ஒன்றாகும். உலகில் முதன் முதல் பல்கலைக்கழகம் இஸ்லாமிய நாடான மொரோக்கோவில் பெண்ணொருவரால் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதை இந்தக் குழு தெரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு தரப்பினருடன் சேர்ந்து வாழக்கூடிய, ஜனநாயக சிந்தனை மற்றும் செயற்பாட்டிற்கு எந்த தரப்பினராக இருந்தாலும் நெகிழ்வுத் தன்மை இருக்க வேண்டும்.

உலக ஆதிக்கத்தில் முன்னிலை ஆதிக்கவாதிகள் அவர்களின் சிந்தனைகள் மற்றும் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தி உலக மக்களுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கு சிறந்த வலையமைப்புக்களை உருவாக்கி முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் தொடர்பில் வரலாறு நெடுகிலும் நாம் பார்த்திருக்கின்றோம். சோவியத் ஆட்சி நிலைகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்காக பல்வேறு அமைப்புக்கள் உலகெங்கிலும் செயற்பட்டமை அறிந்த விடயமே. தற்போது மேற்கத்தேய நாடுகளுக்காக அவ்வாறான பல்வேறு வலையமைப்புக்கள் சிவில் சமூகத்திற்கு மத்தியில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து உண்மைய உணர்ந்துகொள்வது மக்களின் பொறுப்பாகும்.

ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வல்லரசுகளுடன் இரண்டு போராட்டங்களில் வெவ்வேறு கருத்தியல் குழுக்கள் போராட்டங்களில் ஈடுபட்டன. சோவியத் முகாம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நிர்வாகிகளாக தாலிபான்கள் உருப்பெற்றார்கள். சோவியத்தின் ஆதிக்கம் வீழ்ச்சியுற்ற பின்னர் தலிபான்கள் அவர்களின் சிந்தனைப் போக்கு மற்றும் சித்தாந்தங்கள் என்பன அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாத ஆட்சியின் பக்கம் செல்வதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனாலும் அவர்கள் ஷீயாத் தலைவர்களுடனும், ஈரான், சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் கட்டியெழுப்பப்படுகின்ற புரிந்துணர்வு செயற்பாடுகளை அவதானிக்கும் போது தலிபான்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளில் இருந்து மீண்டிருப்பது தெரியவருகின்றது. ஆனாலும் அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தே அவற்றை உறுதிப்படுத்த முடியும்.

ஆனாலும் அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகள் இருக்கின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு சமூகமும் தனித்துவமான அடையாளங்கள், நம்பிக்கைகள் மற்றும் கலாசாரங்களைக் கொண்டுள்ளன. அந்த பன்முகத் தன்மையை புரிந்துகொண்டு மதிக்கின்ற, அவற்றுக்கு இடமளிக்கின்ற நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய ஜனநாயக சிந்தனைப் போக்குடன் மாற்றியமைக்கூடிய உலகை உருவாக்க வேண்டும்.

ஏந்தவொரு சமூகமும் உலகின் ஏனைய சமூகங்களில் இருந்தும் பிரிந்து தனித்துவமான பயணத்தை மேற்கொள்ள முடியாது. பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு, நெகிழ்வுத்தன்மை என்பவற்றின் மூலமே நல்லிணக்க உலகிற்கு வழி காட்ட முடியும்.

இத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலையில் சிறந்த ஜனநாயக தன்மையுடன் ஜனநாயக விழுமியங்களை உலகிற்கு எடுத்துச் செல்லக்கூடிய தன்மையும் அதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒரே சக்தியாக திகழ்வது ஐக்கிய நாடுகள் சபை என்பதே உண்மையகும். அதிகாரத்திற்கு தலைசாய்க்காமல் பண்முகத்தன்மையை உணர்ந்துகொண்டு அதற்கு மதிப்பளிக்கும் நல்லிணக்கத்துடன் கூடிய ஜனநாயக உலகின் இருப்பை உருவாக்குவதற்கு தகுதியுடைய ஒரே அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையாகும். அந்த அமைப்பை பலப்படுத்துவது உலக மக்களின் பொறுப்பாகும்.

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
பாராளுமன்ற உறுப்பினர் 

No comments:

Post a Comment