ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக ஆப்கானிஸ்தானுடனான எல்லைகளை பாகிஸ்தான் திறந்து வைக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது, இது இரு நாடுகளுக்கிடையேயான பதற்றமான உறவுகளை மேலும் பாதிக்கக் கூடிய கோரிக்கையாகும்.
"எனவே, பாகிஸ்தான் அவர்களின் எல்லைகள் திறந்த நிலையில் இருப்பது முக்கியம்" என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கான புதிய அமெரிக்க அகதிகள் அனுமதித் திட்டம் குறித்து ஊடகவியளர்களுக்கு விளக்கினார்.
"வெளிப்படையாக, மக்கள் வடக்கே சென்றால் அல்லது ஈரான் வழியாக துருக்கிக்குச் சென்றால் நாட்டிற்குள் நுழையவும் அரசாங்கத்துடன் அல்லது UNHCR இல் பதிவு செய்யவும் வாய்ப்பு உள்ளது," என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
புதிய திட்டம், அமெரிக்க நிதியுதவி திட்டங்களில் பணியாற்றியவர்களுக்கும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஊடகங்கள் அல்லது அரசு சாரா அமைப்பில் (NGO) பணியாற்றும் ஆப்கானியர்களுக்கும் பொருந்தும்.
விசேட குடிவரவு விசா என அழைக்கப்படும் முந்தைய திட்டம், அமெரிக்க அரசு நிறுவனங்களுக்காக பணியாற்றிய மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் பிறரை உள்ளடக்கியது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீட் யூசுப் இந்த வாரம் வாஷிங்டனில் நடந்த ஒரு மாநாட்டில் பேசுகையில், இடம்பெயர்ந்த ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு அனுப்புதற்குப் பதிலாக தங்கள் நாட்டிற்குள் வைத்திருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.
"அவர்களை ஏன் வீடற்றவர்கள் ஆக்குகிறீர்கள்? அவர்களுடைய நாட்டிற்குள் ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அதிக அகதிகளை அழைத்துச் செல்லும் திறன் பாகிஸ்தானிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதே வேளை ஆப்கானிஸ்தானியர்களை மீள்குடியேற்ற மூன்றாவது நாடுகளைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்க திட்டத்தை துருக்கி அரசாங்கமும் விமர்சித்துள்ளது, இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் "பெரும் இடம்பெயர்வு நெருக்கடியை" ஏற்படுத்தும் என்றும் அந்த நாடு கூறியுள்ளது.
"எங்கள் நாட்டை கலந்தாலோசிக்காமல் அமெரிக்கா எடுத்த பொறுப்பற்ற முடிவை நாங்கள் ஏற்கவில்லை" என்று துருக்கி வெளியுறவு அமைச்சு அங்காராவில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இந்த மக்களை அமெரிக்கா தனது நாட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினால், அவர்களை விமானங்கள் மூலம் நேரடியாக தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்." என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment