தடுப்பூசியின் செயல்திறன் குறைவதால் டெல்டா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது - அமெரிக்க மருத்துவ மையம் தகவல் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

தடுப்பூசியின் செயல்திறன் குறைவதால் டெல்டா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது - அமெரிக்க மருத்துவ மையம் தகவல்

பூஸ்டர் ஊசியின் வீரியம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கொரோனா தடுப்பூசி மருந்துகளை பல்வேறு நாடுகளும் கண்டுபிடித்துள்ளன. புதிய தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஒவ்வொரு தடுப்பூசி மருந்துக்கும் குறிப்பிட்ட சதவீத தடுப்பாற்றல் இருந்தது. அதாவது 80 சதவீதத்திற்கு மேல் தடுப்பாற்றல் கொண்ட மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, இந்தியா உருவாக்கிய சில தடுப்பூசிகள் 90 சதவீதத்திற்கும் மேல் பலன் அளிப்பதாக இருந்தன.

ஆனால் இந்த தடுப்பூசி மருந்துகளின் வீரியம் காலப்போக்கில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்காவில் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த அளவுக்கு மருந்தின் வீரியம் இருக்கிறது? என கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் பலருக்கு வீரியம் குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 91 சதவீத அளவுக்கு இருந்த எதிர்ப்பாற்றல் தற்போது 66 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்டா வகை வைரஸ்கள் பெரும்பாலான நாடுகளில் தாக்கி வருகின்றன. இந்த வகை வைரஸ்கள் அதிக வீரியம் கொண்டவையாக இருக்கிறது.

எனவே இவை உடலில் பரவும் போது தடுப்பூசி மருந்தின் வீரியங்கள் சரிகிறது. இதன் காரணமாக டெல்டா வைரஸ்கள் அதிக அளவில் பரவும் வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க நோய் தடுப்பு அமைப்பு கூறி இருக்கிறது.

அதேநேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய் தொற்றினாலும் கூட பாதிப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மருந்தின் வீரியம் குறைவதால் ஏற்கனவே 3 ஆவதாக பூஸ்டர் ஊசி போட வேண்டும் என்று நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் பூஸ்டர் ஊசி போட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

பூஸ்டர் ஊசியின் வீரியம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

No comments:

Post a Comment