பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து தனது சுய விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) பணிப்பாளராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி 3 வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.
இதேவேளை இராஜின் முகநூல் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது அல்லது செலிழக்க செய்யப்பட்டுள்ளது, டுவிட்டர் பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment